பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7 முதல் நேரடி வகுப்புகள்
பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7 முதல் நேரடி வகுப்புகள் அண்ணா பல்கலை.
சென்னை, பிப். 16: இணையவழியில் நடைபெற்று வரும் பருவத் தேர்வு களுக்குப் பிறகு பொறியியல் மாண வர்களுக்கு மார்ச் 7-ஆம் தேதி முதல் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங் கப்படும் என அண்ணா பல்கலைக்க ழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பல்கலை. வெளி யிட்டுள்ள செய்தி: பி.இ., பி.டெக்., பி.ஆர்க். உள்ளிட்ட படிப்புகளில் 2, 3 மற்றும் 4 -ஆம் ஆண்டு மாண வர்களுக்கு வரும் மார்ச் மாதம் 7-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங் கும். வரும் ஜூன் மாதம் 11-ஆம் தேதி கல்லூரியின் கடைசி வேலைநாள் ஆகும். மேலும் ஜூன் 13-ஆம் தேதி செய்முறை தேர்வுகளும், ஜூன் 22 – ஆம் தேதி இறுதி பருவத் தேர்வுகளும் தொடங்கும். கல்லூரி வேலை நாள் கள் குறைவாக உள்ளதால் அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும்.
Comments
Post a Comment